

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பணத் தாள்கள் கருகின.
குண்டூர் மாவட்டம், சிலகலூரு பேட்டை போஸ் சாலையில் ஆந்திரா வங்கிக் கிளை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு வங்கியில் இருந்த வாடிக் கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே இதுகுறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அங்கு விரைந்து வந்த தீ யணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் வங்கியின் துணை பொது மேலாளர் கிரீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வங்கியின் ஸ்டோர் ரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட் டுள்ளது. இதில் சில ஆவணங்கள், ரூ. 30 லட்சம் வரை பணத் தாள்கள் எரிந்துள்ளன. ஆனால், லாக்கரில் இருந்த நகைகளும், விவசாயிகள் அடகு வைத்துள்ள பட்டா பாஸ் புத் தகங்களும் பத்திரமாக உள்ளன.
சம்பந்தப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து தங்களின் ஆவணங்கள் மற்றும் நகைகளை சரி பார்த்துக் கொள்ளலாம். யாரும் அச்சமடை யத் தேவையில்லை” என்றார்.