

அப்துல் கலாம் மறைவுக்கு மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. ஆனால் அரசு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘கலாமின் மறைவுக்காக ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். ஏழு நாட்களும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். அரசு அலுவலகங்களில் எவ்வித கொண்டாட்டங்களும் நடைபெறாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு விடுமுறை அறிவிக்கப்படாததால் மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.