

சர்வதேச அளவில் தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இப்ராகிம், இந்தியா வர விரும்பியதாகவும் ஆனால் முந்தைய மத்திய அரசு அதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கிஷோர் சம்ரிதே என்பவர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய் திருந்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது:
தற்போது வெளிநாட்டு ஒன்றில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தான் இந்தியா வந்து சட்டத்தை எதிர்கொள்ள இரண்டு மூன்று முறை விரும்பியதாக டெல்லி காவல்துறையின் முன்னாள் ஆணையர் நீரஜ் குமார் மற்றும் பிரபல வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி ஆகியோர் கூறியுள்ளனர்.
ஆனால் அவரின் கோரிக் கைக்கு முந்தைய மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்பட வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றத் தின் முன்னாள் நீதிபதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த ஹெச்.எல்.தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, `இந்த விஷயத்தில் நீதித்துறை எதுவும் செய்ய முடியாது. அதனால் இதில் நீதித்துறை தலையிடத் தேவை யில்லை' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.