Published : 19 Jul 2015 11:53 AM
Last Updated : 19 Jul 2015 11:53 AM

பெண்களின் எமன் தற்கொலை; ஆண்களின் எமன் சாலை விபத்து

தேசிய குற்ற ஆவண புள்ளி விவரங்கள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. அதன்படி பெண்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணியாக தற்கொலை முதலிடத் தில் உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை விபத்து முக்கிய காரணியாக விளங்குகிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர்.

பெண்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 42 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்துள் ளனர். அவர்களில் பெரும்பாலான வர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர் கள். தற்கொலை செய்த பெண் களில் 68 பேர் பலாத்காரத்தாலும் 2222 பேர் வரதட்சிணை கொடுமை யாலும் பாதிக்கப்பட்டவர்கள்.

பொதுவாக தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண் களில் திருமணமானவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது.

இயற்கை பேரழிவுகளில் மின்னல் பாய்ந்து உயிரிழப் போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2500 பேர் மின்னல் பாய்ந்து பலியாகி உள்ளனர்.

கடந்த 2014-ல் நாடு முழுவதும் 12,360 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x