நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: சுஷ்மா, வசுந்தராவை பதவியில் இருந்து நீக்க அரசு மறுப்பு

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: சுஷ்மா, வசுந்தராவை பதவியில் இருந்து நீக்க அரசு மறுப்பு
Updated on
2 min read

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தபோதிலும், நாடாளு மன்றத்தை சுமுகமாக நடத்த ஒத் துழைப்பு கோரி மத்திய அரசால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர் களை பதவி நீக்கம் செய்யா விட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அதேநேரம், யாரையும் பதவி நீக்கம் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிலம் கையகப்படுத்துதல், ஜிஎஸ்டி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கோரி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 29 கட்சிகளின் 42 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். எனினும் அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சியின் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டியது அவசியம். அதேநேரம் இந்தப் பொறுப்பை அனைத்துக் கட்சி களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாம் அனை வரும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும். நிலம் கையகப் படுத்துதல் மசோதா உள்ளிட்ட சில மசோதா குறித்து கடந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக நில மசோதா தொடர் பாக தெரிவிக்கப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் உள்ளடக்கி அந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.

மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் குறுகிய காலமே நடைபெற உள்ளது. எனவே, அந்த நேரத்தை முக்கியமான அனைத்து பிரச்சினை கள் குறித்தும் விவாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு அரசு தயாராக உள்ளது.

வேறு சில பிரச்சினைகளை விவாதிப்பதற்கு பல்வேறு அமைப்புகள் உள்ளன. அதுபற்றி நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசும்போது, “நாடாளுமன்றம் சுமுகமாக நடை பெற வேண்டுமானால், கிரிக்கெட் ஊழலில் சிக்கிய லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் புகாரில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பேசும்போது, “லலித் மோடி விவகாரம் தொடர் பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார். மத்திய அமைச்சர்கள் யாரும் சட்டவிரோத மாகவோ, நெறிமுறையை மீறியோ செயல்படவில்லை. அப்படியிருக் கும்போது அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்றவர்களின் நிபந்தனைகளை ஏற்க முடியாது. அரசுக்கு யாரும் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

இதற்கிடையே, நாடாளு மன்றத்தை நடத்த அனுமதிப்ப தில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை 29 எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாடாளுமன்றத்தை முடக்குவது சரியல்ல. ஆனால், இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும். லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம். நில மசோதாவை ஏற்க மாட்டோம். இதுவிஷயத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒருமித்த செயல்பட வேண்டும்” என்றார்.

சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் கூறும்போது, “இதுபோன்ற அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும்போதெல்லாம் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் கூறு கின்றனர். ஆனால் நடைமுறையில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதுபோல் இந்த முறையும் நாடாளுமன்றம் சுமுகமாக நடை பெறும் என்று நான் நினைக்க வில்லை” என்றார்.

சுமித்ரா முயற்சி

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நேற்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in