அதிகாரிக்கு லஞ்சம் தராததால் பிறப்புக்கு பதில் இறப்புச் சான்றிதழ்

அதிகாரிக்கு லஞ்சம் தராததால் பிறப்புக்கு பதில் இறப்புச் சான்றிதழ்
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஜம்மனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் அருணா. இவர், தங்கத்தாய் திட்டத்திற்காக தனது மகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற, கிராம ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரராவிடம் விண்ணப்பித்தார். இதற்கு அவர் ரூ. 400 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அருணா லஞ்சம் தர மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வர ராவ், பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக குழந்தையின் இறப்புச் சான்றிதழை வழங்கினார். ஆத்திரமடைந்த குழந்தையின் -பெற்றோர் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in