

மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி செய்துள்ளார்.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
நாளை அதிகாலை ராமேசுவரம் வந்தடையும் பிரதமர் அங்கு காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமருடன் சில மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்" என்றார்.