

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தா வனத்தில் பெண்ணிடம் இருந்து பணப்பையை பிடுங்கிச் சென்ற குரங்கு அதில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்களை ஓடிச் சென்று பணத்தை சேகரித்தனர். இதைக்கண்டு உற் சாகமடைந்த குரங்கு தொடர்ந்து பணத்தை மழையாக பொழியச் செய்தது.
மும்பையைச் சேர்ந்த ஹேமாவதி சோன்கர் என்ற பெண் தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் மதுரா மற்றும் பிருந்தாவனத்துக்கு சுற்றுலா வந்தனர். கடந்த சனிக்கிழமை மதியம் மதுராவில் இருந்து பிருந்தாவனத்துக்கு சென்றனர். அப்போது வழியில் உள்ள பிரபலமான பாங்கி பிகாரி கோயி லுக்கும் சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு கோயிலுக்கு வெளியே உள்ள கடை வீதி வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய குரங்கு ஒன்று ஹேமாவதி வைத்திருந்த பணப்பையை எதிர் பாராதவிதமாக பறித்துக் கொண்டு ஓடியது. அதில் 500 ரூபாய் நோட்டுகளாக ஒன்றரை லட்சமும், சில்லறையாக பணமும் இருந்தது. அப்போது ஹேமாவதியில் மகளிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை யாரோ திருடிவிட்டனர். இதனால் அந்த குடும்பத்தினர் தலையில் கைவைத்துக் கொண்டு செய்வ தறியாது திகைத்தனர்.
அப்போது திடீரென மேலே இருந்து 500 ரூபாய் நோட்டுகள் மழையாக பொழியத் தொடங்கியது. அந்த குரங்கு ஒவ்வொரு நோட்டாக காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் சென் றவர்கள் கிடைத்தவரைக்கும் லாபம் என்று குரங்கு வீசிய பணத்தை ஓடிச் சென்று எடுத்துக் கொண்டனர். தனது செய்கையால் மனிதர்கள் ஓடுவதைப் பார்த்த உற்சாகமடைந்த குரங்கு பையில் இருந்த பணம் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு வேடிக்கை காட்டி விட்டு ஓடிவிட்டது.
இதில் ஒரு சில இளைஞர்கள் மட்டும் பணத்தை இழந்த குடும்பத் துக்கு உதவ முன்வந்தனர். பணத்தை கீழே இருந்து எடுத்த வர்களிடம் சென்று அதனை திரும்பவும் அந்த குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இறுதியாக கிடைத்த பணத்தை பெற்று அங் கிருந்து கிளம்பினர்.
பிருந்தாவனம் பகுதியில் உள்ள குரங்குகள் அங்கு வருவோரிடம் இருந்து கேமரா, பை உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு ஓடுவதும், பிறகு சாப்பிட ஏதும் வாங்கிக் கொடுத்தால் பொருட் களை திரும்பக் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளன என்று அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிருந்தாவனத்துக்கு வந்தார். அப்போது குரங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.