Last Updated : 28 Jul, 2015 09:23 AM

 

Published : 28 Jul 2015 09:23 AM
Last Updated : 28 Jul 2015 09:23 AM

விவசாயிகள் தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி டெல்லியில் தேவகவுடா உண்ணாவிரதம்

நாட்டில் அதிக மழை அல்லது வறட்சி காரணமாக பயிர்கள் பொய்த்து, விவசாயிகள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளனர். கடன் நெருக்கடி தாங்க முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். கர்நாடகாவில் கடந்த சில நாட்களில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், விவசாயிகள் தற் கொலை விவகாரம் குறித்து நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்தி முடிவு காண வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

இதுகுறித்து தேவகவுடா கூறு கையில், “விவசாயிகள் தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும் வரை உண்ணா விரதப் போராட்டம் தொடரும்’’ என்றார்.

“காதல் தோல்வியால் விவசாயி கள் தற்கொலை செய்து கொள் கின்றனர் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளாரே?’’ என்று செய்தியா ளர்கள் கேட்டதற்கு, “மிக மோசமான கருத்தை அமைச்சர் தெரிவித்திருக் கிறார். இதுபோன்ற பேச்சை பிரதமர் மோடி எப்படி சகித்து கொண்டிருக் கிறார்’’ என்று தேவகவுடா பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x