பாஜக தலைவர்கள் தொகுதி மாறுவது ஏன்?- திக்விஜய் சிங் கேள்வி

பாஜக தலைவர்கள்  தொகுதி மாறுவது ஏன்?- திக்விஜய் சிங் கேள்வி
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசுவது உண்மையானால், பாஜக தலைவர்கள் தொகுதியை மாற்றி போட்டியிடுவது ஏன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

போபாலில் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாகக் கூறப்படுகிறது. அது உண்மையென்றால், பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி, நவ்ஜோத் சிங் சித்து, லால்ஜி டாண்டன் உள்ளிட்டோர் தொகுதி மாறி போட்டியிடுவது ஏன்?” என்றார்.

மற்றொரு பாஜக தலைவரான ஜஸ்வந்த் சிங்கிற்கு, அவர் விரும்பிய ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட பாஜக அனுமதி மறுத்தது. இதையடுத்து அவர் சுயேச்சையாக அங்கு போட்டியிடுவார் என கூறப்படு கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய திக்விஜய் சிங், “பாஜகவின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கிற்கு, அவர் விரும்பிய தொகுதியை ஒதுக்கீடு செய்யாமல் துன்புறுத்து வது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in