பெங்களூருவில் இடிந்து விழுந்த திரையரங்கு மேற்கூரை - 5 பேர் காயம்

பெங்களூருவில் இடிந்து விழுந்த திரையரங்கு மேற்கூரை - 5 பேர் காயம்
Updated on: 
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

பெங்களூருவில் உள்ள பீன்யா பகுதியில் நேற்று பிற்பகல் கனமழை பெய்தது. அங்குள்ள பாரதி திரையரங்கில் ‘பிரேமத‌ ஊரள்ளி’ என்ற கன்னட திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதியான‌ பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ் (PoP) இடிந்து விழுந்தது.

இதில் திரையரங்கில் திரைப்படம் பார்த்து கொண்டிருந்த மஞ்சுநாத் (28), அவரது மனைவி லட்சுமி (23) உட்பட 5 பேருக்கு தலையிலும், தோள்களிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து திரையரங்க ஊழியர்கள் காயமடைந்தோரை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திரையரங்கில் மேற்கூரை இடிந்து விழுந்ததும் மக்கள் அலறியடித்து வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தாசரஹள்ளி போலீஸார் திரையரங்கின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூருவில் இடிந்து விழுந்த திரையரங்கு மேற்கூரை - 5 பேர் காயம்
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - பலன்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in