மும்பையில் இறந்தவர்கள் பெயரில் ஆதார், பான் - ரூ.2.29 கோடி நிலத்தை மோசடி செய்த 5 பேர் கைது

மும்பையில் இறந்தவர்கள் பெயரில் ஆதார், பான் - ரூ.2.29 கோடி நிலத்தை மோசடி செய்த 5 பேர் கைது
Updated on
1 min read

நவி மும்பை: நவி மும்​பை​யின் கரஞ்​சடே பகுதியைச் சேர்ந்த ஒரு நிலம், நாதன் எலி​யாஹு சின்​சோல்​கர் மற்​றும் ஷாலோம் எலியாஹு சின்சோல்​கர் ஆகிய இரு சகோ​தரர்​களுக்​குச் சொந்தமானது.

இரு​வரும் இஸ்​ரேல் நாட்​டுக்கு புலம் ​பெயர்ந்​து, அங்கேயே காலமா​னார்​கள். இதை அறிந்த சூரஜ் ஷிண்​டே, தனது தந்தை மற்றும் மைத்​துனரை, மறைந்​து​ போன நில உரிமை​யாளர்​கள் நாதன் மற்றும் ஷாலோம் போல ஆள்​மாறாட்​டம் செய்துள்ளார்.

இதற்​காக போலி பான் கார்டு மற்​றும் போலி ஆதார் கார்டு போன்ற அடை​யாள ஆவணங்​களைத் தயாரித்​துள்​ளார். பின்னர் அந்த நிலத்தை ரூ.2.29 கோடிக்கு போலி விற்​பனைப் பத்​திரம் மூலம் விற்றுள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில், நவி மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலை​யில், கோவாவின் திவிம் பகு​தி​யில் சூரஜ் ஷிண்டே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சித்​தப்பா சதீஷ் நம்​தேவ் ஷிண்டே (41) மற்றும் மைத்​துன​ரான தேஜஸ் பிரமோத் சுர்வே (26) ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்​டனர். மற்ற குற்றவாளி​களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

மும்பையில் இறந்தவர்கள் பெயரில் ஆதார், பான் - ரூ.2.29 கோடி நிலத்தை மோசடி செய்த 5 பேர் கைது
கேரளா மழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in