புரட்டாசி 4-வது சனிக்கிழமை எதிரொலி: திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு

புரட்டாசி 4-வது சனிக்கிழமை எதிரொலி: திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு
Updated on: 
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையானை இந்த புரட்டாசி 4-வது சனிக்கிழமையன்று தரிசிக்க, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தர்ம தரிசனம் செய்ய நேற்று 8 முதல் 10 மணி நேரம் ஆனது. இந்த புரட்டாசி மாதத்தில் தமிழகம், புதுவை, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பலர் மஞ்சள் ஆடை உடுத்தி, கோவிந்த மாலை அணிந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து திருமலைக்கு நேர்த்திக் கடனாக நடந்து வந்து, விரதத்தைத் திருமலையில் நிறைவு செய்கின்றனர். தற்போது 4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், தசரா விடுமுறை என்பதாலும் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகமாகவே உள்ளது.

புரட்டாசி 4-வது சனிக்கிழமை எதிரொலி: திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு
“விஜய்யின் போலி பிம்பம் இடைத்தேர்தலில் கிழிந்துவிட்டது” - ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in