மோடி விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது

மோடி விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது
Updated on
2 min read

கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜக வெற்றி பெற்றபோது மொத்தம் 32 சதவீத வாக்குகளைப் பெற்றது. வாஜ்பாய் தலைமையில் முன்பு பாஜக ஆட்சி அமைத்த தைவிட இப்போது சுமார் 10 சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

பாஜகவுக்கு கிடைத்துள்ள இந்த பெருவாரியான ஆதரவு இருவேறு வழிகளில் கிடைத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாரம்பரியமாக பாஜக வுக்கு வாக்களித்து வருபவர்கள் இதில் அதிகம். ராமஜென்மபூமி, அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கப்படு வது உள்ளிட்ட கொள்கைகள் காரணமாக தீவிர இந்துத்து வவாதிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றன. இதுதான் முஸ்லிம்களால் தீவிரமாக வெறுக் கப்படுகிறது. இதனை தவிர்த்து விட்டு பாஜகவை ஒரு தகுதி வாய்ந்த அரசியல் கட்சியாக மதிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமூக சேவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுதான் நேரு குடும்பத்தினரால் வழிநடத்தப்படும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவை வேறுபடுத்தி காட்டுகிறது.

பாஜகவுக்கு இப்போது கிடைத்துள்ள கூடுதல் ஆதரவுக்கு மற்றொரு முக்கிய காரணம் மோடியின் ஈர்ப்பு சக்தி. மோடி நிச்சயமாகவே சிறந்த பேச்சாளர். இந்த வகையில் இதற்கு முன்பு மக்களின் கவனத்தை தங்களை பக்கம் முழுமையாக வசீகரிக்கும் பேச்சாற்றல் சமீபகால அரசியல்வாதிகளில் பால் தாக்கரே, லாலு பிரசாத் ஆகியோருக்கு உண்டு. சிக்கலான விஷயங்களை கூட எளிதான வார்த்தைகளாக மாற்றி பேசும் வித்தை மோடிக்கு வசப்படுகிறது.

நம்பிக்கைக்கு உரியவர், இந்திய தேசியவாதத்தின் பிரதிநிதி என்ற பெயரை மோடி எடுத்துவிட்டார். தனது உடை அணியும் முறை, பாவனைகளையும் அதற்கு ஏற்ப அவர் மாற்றிக் கொண்டுவிட்டார். மக்களை கவரும் வசியத்தை அவர் தனக்குள்ளே உருவாக்கிக் கொண்டார். புதிய இந்தியாவை தன்னால் உருவாக்கித் தர முடியும் என்று நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைத்தார். இவை அனைத்தும் அவருக்கு பெருவாரியான வாக்குகளை பெற்றுத்தந்தது.

எனினும் இப்போது இந்தியா பெரிய அளவில் மாறிவிடவில்லை. அரசு செயல்பாடுகளில் பெரிய மாற்றம் இல்லை. பொருளாதாரம் பொங்கி எழுந்துவிடவில்லை என்று சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்கள் அறிக்கை வாசிக்கின் றன. இந்திய கிராமப்புறங்களில் 92 சதவீத மக்கள் இப்போதும் மாதம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே சம்பாதிக்க முடிகிறது என்று வறுமை தொடர்பான அறிக்கை காலைவாருகிறது.

செய்தித் தொலைக்காட்சிகள் பல மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அமைச்சர்களின் முறை கேடுகளையும், தவறான நடவடிக் கைகளை பட்டியலிட்டு குற்றம் சாட்டுகின்றன. இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசில் இருந்த அதே நிலைதான் இப்போதும் தொடர்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.

எனினும் சமீபத்தில் நடந்த சில இடைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது மோடி மீதான நம்பிக்கையை மக்கள் முழுவதுமாக இழந்துவிடவில்லை என்று காட்டுகிறது.

இடைத் தேர்தலில் கேரளா, திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவுக்கு அதிக வாக்கு கள் கிடைத்துள்ளது முன்பு எப்போதும் நடைபெறாத விஷயம். முக்கியமாக காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மாறிமாறி ஆட்சி அமைத்து வரும் கேரள மாநிலத்தில், பாஜக ஆதரவு அதிகரித்துள்ளது அக்கட்சியின ரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனினும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியின் மீதும், அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொள்வதன் மூலம்தான் கூடுதலாக கிடைத்த ஆதரவை மோடி தக்கவைத்துக் கொள்ள முடியும். இவை தவிர மோடி மீது தனிப்பட்ட முறையில் நம்பிக்கை வைத்து வாக்களித்த பிரிவினரின் நம்பிக்கையும் காப்பாற்றி அவர் களின் ஆதரவையும் தக்கவைக்க வேண்டும். எனினும் அரசு மீது ஏற்படும் மோசமான குற்றச்சாட்டுகள் மோடி தனது பாதையில் பயணிக்கவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேலும் ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவிய விஷயத்தில் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்களுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்ளும் மோடி, பிரச்சினைக்குரிய விஷயத்தில் மவுனம் காப்பது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதுபோன்ற தவறுகளை அனுமதிப்பது தனது ஆட்சியில் மோடி மேலும் தவறுகளை ஊக்குவிப்பதாக அமையாதா? தனது ஆட்சி நேர்மையானது, சிறு முறைகேடுகளுக்கும் இடம் தராது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. தவறுகள் நடக்கும்போது மற்ற தலைவர்கள் மவுனம் காத்திருக்கலாம். ஆனால் மோடியும் அவ்வாறு செயல்படலாமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in