Published : 25 Jul 2015 09:15 AM
Last Updated : 25 Jul 2015 09:15 AM

வீட்டுப் பாடம் செய்யாததால் தண்டனை: 2 மணி நேரம் முட்டிபோட்டதால் 6-ம் வகுப்பு மாணவி மரணம்

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஹுசூராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் சம்மய்யா, ரமா தம்பதியனர். இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் அக்‌ஷிதா (12) எனும் மகள் இருந்தாள்.

அதே பகுதியில் உள்ள 'விவேக வர்தினி' எனும் தனியார் பள்ளி யில் அக்‌ஷிதா படித்தாள்.

கடந்த 16ம் தேதி வீட்டுப் பாடம் எழுதவில்லை என்ற காரணத் துக்காக‌, கணக்கு ஆசிரியை கலாவதி, அக்‌ஷிதாவை சுமார் 2 மணி நேரம் முட்டி போட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அழுது கொண்டே மாலை வீட்டிற்கு சென்ற அக்‌ஷிதா, நடந்த விஷயங் களை தனது பெற்றோருக்கு கூறி அழுதிருக்கிறாள். தன் னால் நிற்கவும், நடக்கவும் முடியவில்லை என கூறி உள்ளார். உடனடியாக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வாரங் கலில் உள்ள அரசு மருத்துவ மனையில் உயர்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அக்‌ஷிதாவிற்கு ரத்த ஓட்டம் நின்று, கால்கள் செயலிழந்தன‌. தொடர்ந்து சிகிச்சை அளித்தும், பலனின்றி அவள் நேற்று முன் தினம் உயிரிழந்தாள்.

இதனை அறிந்து, மாணவர் சங்கத்தினர், மற்றும் கிராம மக்கள் மாணவியின் சடலத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்த விஷ யத்தை அறிந்த பள்ளி நிர்வாகத் தினர், பள்ளிக்கு விடுமுறை அளித்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் சங்கத்தினர், பள்ளிக்குள் புகுந்து மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வன்முறையில் இறங்கினர்.

இதற்குக் காரணமான‌ ஆசிரி யையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி 8 மணி நேரம் பள்ளி முன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரவு கரீம்நகர் கோட்டாச்சியர் சந்திரசேகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து, பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இதுகுறித்து வரும் 30ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கரீம்நகர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x