

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய மண்ட பத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோனியா நம்பிக்கை
கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு பல்வேறு தேர்தல்களில் நாம் தோற்றிருக்கிறோம், மீண்டெழுந் திருக்கிறோம். இந்தத் தோல்வி யில் இருந்தும் மீண்டெழுவோம். சிறந்த எதிர்க்கட்சி என்பது அவையில் அதிக கேள்விகளை எழுப்ப வேண்டும், பயனுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும். நாடாளுமன்ற அவைகளில் நாம் ஓரணியாக இருந்து வலுவான எதிர்க்கட்சி யாக செயல்பட வேண்டும். முக்கியமான விவகாரங்களில் அரசின் தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைவராகத் தேர்வு
கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியின் பெயரை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன் மொழிந்தார். மோஷினா கித்வாய் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் நாடாளு மன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.