Last Updated : 28 Jul, 2015 05:44 PM

 

Published : 28 Jul 2015 05:44 PM
Last Updated : 28 Jul 2015 05:44 PM

அறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டராஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாமல், மத பேதமின்றி பலதரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம். அவரது திடீர் மறைவு தேசத்தை துயரத்துக்கு தள்ளியுள்ளது. தமிழகத்தில் பிறந்த இந்த மாமனிதரின் இறப்பு தேசத்தின் எல்லையை தாண்டிய சோகத்தை விட்டுச் சென்றுள்ளது.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக ஜூலை 26ம் தேதி அப்துல் கலாம் பதிவு செய்த இறுதியான ட்வீட் இது தான். அவரது இந்த அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தற்போது அவரது நினைவாக > In memoryof Dr.Kalam என்ற பெயரில் இயங்கி வருகிறது.



அவரது மறைவையொட்டி துயரடைந்த ட்வீட்டாளர்கள் #அப்துல்கலாம், #KalamSir, #APJAbdulKalam போன்ற பல்வேறு டேக்குகளில் அவருக்கு புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் உதிர்க்கப்படும் கோடிக்கணக்கான உருக்கமான ட்வீட்களில் இருந்து வெகு சில:

Vivekh actor ‏@Actor_Vivek - அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து, மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம் அய்யாவின் பி.தினத்தை "இந்திய மாணவர் தினம்" அறிவித்தால் என்ன?

P. Chidambaram ‏@PChidambaram_IN - அப்துல்கலாமின் மறைவை ஒவ்வொரு இந்தியரும் தங்களது தனிப்பட்ட இழப்பாக கருதி வருத்தம் அடைகிறார்கள். அனைத்து பிரிவு மக்களுக்கும் அன்புக்குரியவராக தன்னை உருவாக்கிக்கொண்டவர் கலாம். இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், பல்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் என அனைவரின் அன்புக்கும் உள்ளானவர்கள் சமீபகால வரலாற்றில் வெகு சிலரே.

sachin tendulkar ‏@sachin_rt - முன்னாள் குடியரசு தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி. அனைவருக்கும் உத்வேகமாக திகழ்ந்த அசாத்திய மனிதனுக்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது.

Kailash Satyarthi ‏@k_satyarthi - சம காலத்தில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கு கதாநாயகனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த மனிதரை இழந்துவிட்டோம். கலாம், தொலைநோக்கு பார்வைக்கான ஆற்றலாக திகழ்ந்தார். நம் அனைவருக்குமான உற்சாகம் அவர்.

Chetan Bhagat ‏@chetan_bhagat - இந்தியாவின் நாயகனை இழந்துவிட்டோம். நீங்கள் எப்போதுமே எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்.

Office of RG ‏@OfficeOfRG - அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவர் இந்த தேசத்தின் இதயங்களையும், மனங்களையும் தனது உள்ளன்பாலும், அறிவுக்கூர்மையாலும் வெற்றி கண்டவர்.

Shashi Tharoor ‏@ShashiTharoor - இந்திய கலாச்சாரம் கொண்டிருக்கும் எதிர்காலத்துக்கான வளர்ச்சி சாத்தியங்கள் குறித்த தொலைநோக்கு கனவை அனைவரது மனதிலும் விதைத்தார் அவர்.

Ashwin Ravichandran ‏@ashwinravi99 - இந்தியா 2020 கனவை நினைவாக்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் புகழஞ்சலி. தன்னலமற்ற ஆன்மாவாக திகழ்ந்த உங்களுக்கு எங்களது நன்றிகள்.

Kiran Bedi ‏@thekiranbedi - வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சை சுவாசித்துவிட்டார். அரிய பணியாற்றி சென்றுவிட்டார்.

R.Parthiepan ‏@rparthiepan - பிரம்மச்சாரி ஆயினும் நாடே உறவென வாழ்ந்து தன்னலமற்ற தனிப்பெரும் சக்தியாய் காலம் கடந்து இளைஞர் மனதில் வாழும் கலாம் அவர்களின கனவை நனவாக்குவோம்.

பா.தன லட்சுமி ‏@DHANALA09 - ஏ பாரதமாதா உனது தலை சிறந்த தலைமகன் மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.! மீண்டும் அவரை எங்களுக்கு பெற்றுக் கொடு. #மேதகுAPJஅப்துல்கலாம்.

Sakthi Balan ‏@sakthibalan5 - அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டோம்.நம்மை விட்டு பிரிஞ்சிட்டார்னு சொல்றவங்க தயவு செய்து மரம் நடுங்க லஞ்சம் வாங்காதிங்க நேர்மையா இருங்க #கலாம்

anandhan V ‏@kvpanand - நாடு மிகப் பெரிய தேசபக்தரை இழந்து விட்டது.... அவர் எங்கு இருந்தாலும் நமது நாட்டின் நலனுக்காக சிந்தித்து கொண்டே இருப்பார்....அவரை என்றும் எங்கள் நினைவுகளில் இருந்து மறைக்க முடியாது....

மழையின் காதலன் ‏@Im_bharathi - ஒரு டைமாச்சும் அவரை சந்திக்கனும்னு ஆசைபட்டேன்.. கடவுளை மனுசன் சந்திக்க சாத்தியம் இல்லைனு காலம் கத்துக்குடுத்துருச்சு.

வெங்காயம்_Onion ‏@LFR_Aathif - வரலாற்றில் ஒரு தமிழனின் இழப்பிற்கு உலக அளவில் இரங்கல் அனுசரிக்கப்படுகிறது என்றால் அது அப்துல் கலாம் அவர்களுக்கு தான் #RIPKalam

tanjooraan ‏@ravan181 - மேதையாக இருக் "கலாம்" எளிமையாக இருக் "கலாம்" விக்ஞானியாக இருக் "கலாம்" அடக்கமாக இருக் "கலாம்" ஆனால் அமரராக இருக்க கூடாது.

MANIVJ&MSD♥ ‏@manikandan_sam - இன்னமும் மனம் ஏற்க மறுக்கிறது #ஏபிஜே மறைவை!! இளைஞர்களின் தீப்பந்தமாகவும் மாணவர்களின் உந்துகோளாவும் வாழ்ந்த மகான்! ஒரு மனிதன் எவ்வாறு தன் நாட்டை மட்டும் நேசித்திருக்க முடியும்? அதற்கு எடுத்துக்காட்டு இவர். தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்த உன்னதமான மாமனிதர்! #ஏபிஜே

கலாமின் கனவு ‏@Nausaths - நம்மிடம் நெருங்கி பழகாத ஒருவரின் மரணம் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனில் இதுவே அவரின் வாழ்வின் வெற்றி #கலாம்

Prashanth ‏@itisprashanth - உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்

The Protagonist ‏@arvinfido - அடுத்த சச்சின் ✔ அடுத்த சூப்பர் ஸ்டார் ✔ அடுத்த அப்துல் கலாம் ✖

SKP Karuna ‏@skpkaruna - தனித்தப் புகழுடைய தமிழன் கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.

நெற்றிக்கண் ‏@thirupgp - காந்தியும் காமராசும் வாழ்ந்த காலத்தில் பிறக்காத நாங்கள் #கலாம் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்.

நான் மாகன் அல்ல ‏@bravosuresh03 - இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு #கலாம் சார் பத்தி எதும் தெரியல.அவர் என்ன பண்ணுனார்ன்றதும் தெரியல.. இதுக்கு ஏன் லீவு விட்டாங்கனுன்றதும் தெரியல :((

SathyaN ‏@Duraisathyan - 60லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்

!!! *எமகாதகன்* !!! ‏@Aathithamilan - மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் #RIP_APJAbdulKalam

புகழ் ‏@mekalapugazh - நேரில் சந்தித்திராதவர்.... ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதொரு உணர்வு..அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை....கலாம்.

எங்கள் கலாம் ‏@iyemmanoj - தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தின் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்!! #கண்ணீர்அஞ்சலி #கலாம்அய்யா

Sangeetha ‏@_Sangeethaa_ - கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.. #RIP டாக்டர் அப்துல் கலாம்

Satheesh Kumar ‏@saysatheesh - ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை

நீலிக்குமார் ஞா ‏@Neelikumarg - காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84 வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்..

sphameed ‏@sphameed - எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர் #KalamSir

காக்கைச் சித்தர் ‏@vandavaalam - இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார் #கலாம்

யாரோ ...!!! ‏@iBehindMe - ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்... #அப்துல்கலாம்

SKP Karuna ‏@skpkaruna - தனது பதவிக்காலத்தில் யாரையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனசாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் கலாம். #AbdulKalam

ravitej sahu ‏@ravitejsahu - தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir

◀ⓐⓥⓘⓢ▶ ‏@vm_siva - உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam

Rambir Kaushik ‏@RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir

தமிழச்சி ‏@NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.

வாழவந்தார் ‏@Iam_SuMu - தமிழர்களின் தலைநிமிர்வு #கலாம்

தரலோக்கலு லேஜிபாய்» ‏@TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.

தமிழ்.ஜவஹர் ‏@jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை #RIP APJ

King ‏@jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip

Kumar Parameswaran ‏@SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்

ஆட்ட நாயகன் ‏@issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ராமேஸ்வரம்

Nellaiseemai ‏@nellaiseemai - கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார் #அப்துல்கலாம்

Vijay sekhar C ‏@sekharcv - #APJAbdulKalam அறிவார்ந்த எளிமையின் சின்னம்.

CHINNADURAI ‏@k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்

C MUTHUGURUSAMY ‏@vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.

RIP APJ SIR ‏@JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று #அப்துல்கலாம்

பெப்லவன் ‏@manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்

SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x