

கறுப்புப் பண விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உயர்மட்ட முதல் கூட்டம் ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
விசாரணைக் குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா, மற்றும் துணைத் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோரிடத்தில் அனுமதி வாங்கியபிறகு குழுவில் உள்ள 11 பேருக்கும் இந்த உயர்மட்டக் கூட்டத்திற்கு வருவாய்த் துறை அழைப்பு விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கறுப்புப் பண விவகாரத்தை எதிர்கொள்ள கொள்கை விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இது குறித்து நடைபெற்று வரும் நடப்பு விசாரணைகளின் நிலவரம் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது.