லலித் மோடியின் பயண ஆவணங்களுக்காக பரிந்துரை மேற்கொள்ளவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

லலித் மோடியின் பயண ஆவணங்களுக்காக பரிந்துரை மேற்கொள்ளவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
Updated on
1 min read

லலித் மோடியின் பயண ஆவணங்கள் குறித்து பிரிட்டன் தனது சட்ட விதிமுறைகளின் கீழ் என்ன செய்ய முடியுமோ அதனை செய்யட்டும் என்று தான் விட்டுவிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பயண ஆவணங்களுக்கான லலித் மோடி கோரிக்கை குறித்து பிரிட்டன் அதிகாரிகள் முடிவுக்கே தான் விட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, ட்வீட் ஒன்றிற்கு பதில் ட்வீட் செய்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், அதில், "நீங்கள் சரியாகக் கூறுகிறீர்கள். நான் மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றுதான். லலித் மோடியின் பயண ஆவணங்களுக்கான கோரிக்கையையோ, பரிந்துரையையோ நான் மேற்கொள்ளவில்லை.

நான் முடிவை பிரிட்டன் அதிகாரிகளிடத்தில் விட்டு விட்டேன். அதாவது பிரிட்டன் சட்ட விதிமுறைகளின் படி என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும் என்று விட்டு விட்டேன். அதைத்தான் அவர்களும் செய்தார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஜூன் 14, 2015-ல் லலித் மோடி தனது மனைவியின் புற்று நோய் பற்றியும் சிகிச்சையை போர்ச்சுக்கல் நாட்டில் வைத்திருப்பதாகவும் கூறியதாக சுஷ்மா ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்தே லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் தேவைப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசு லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் வழங்க தயாராக இருப்பதாகவும் ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதனை தடுத்து விட்டதாகவும் சுஷ்மா ட்வீட் செய்தார். அதாவது இந்திய-பிரிட்டன் உறவுகள் பாதிக்கும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூறித் தடுத்ததாக சுஷ்மா ட்வீட் செய்தார்.

'எனவேதான் மனிதநேயத்தின் அடிப்படையில் பிரிட்டன் அரசு லலித் மோடியின் கோரிக்கையை பரிட்சித்துப் பார்த்து சட்டவிதிகளுக்கிணங்க முடிவெடுக்க வேண்டும். லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் கொடுப்பதினால் இந்திய-பிரிட்டன் உறவுகள் பாதிக்கப்படாது.” என்று சுஷ்மா தொடர் ட்வீட்களில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஏன் இதனை செய்தியாளர்கள் மூலம் தன் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு வெளிப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு ட்வீட் செய்த சுஷ்மா, “ஒரு அமைச்சராக நாடாளுமன்றத்துக்குத்தான் எனக்கு பிணைப்பு, பொறுப்பு உள்ளது தேசத்துக்கு தெரிவிக்க நாடாளுமன்றம் மட்டுமே ஒரே இடம்.

நான் தினமும் பலருக்கும் உதவி செய்து வருகிறேன். அதுவும் ஒரே ட்வீட்டில் செய்து வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார் சுஷ்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in