இப்போது யாருடைய புடவை? - மீட்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு வழிகாட்டும் அமைப்பு

இப்போது யாருடைய புடவை? - மீட்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு வழிகாட்டும் அமைப்பு
Updated on
1 min read

மேற்கு வங்காளம் மற்றும் பீகாரைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளிகள், அமெரிக்காவைச் சேர்ந்த நகை மற்றும் சிகை அணிகலன்கள் வடிவமைப்பாளர் ரோசினாவுடன் கைகோர்த்து, நகைகள் செய்து, பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட பெண்களின் கல்விக்கு உதவுகின்றனர்.

ரோசினா சேமி நகைக்கடையின் உரிமையாளர் ரோசினா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரோசினா சேமி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏதேனும் செய்ய எண்ணியவர் தன் தோழி ஒருவரிடம் இருந்து நகைக்கடைத் தொழிலைக் கற்றார். நியுஸிலாந்தில் பிறந்தவர், நியூயார்க்கில் தனது வடிவமைப்புத் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் பேசியது:

"இந்தியா முழுக்கவுள்ள சிவப்பு விளக்குப் பகுதிகளில் இருந்து மீட்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்டது அப்னே ஆப் பெண்கள் (பெண்களே, உங்களால் உங்களுக்காக) அமைப்பு. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, பெண்களே பெண்களுக்காகப் போராடும் ஒரு தொண்டு நிறுவனத்தின் சிறு தொடக்கமே இந்த "இப்போழுது யாருடைய புடவை?" வர்த்தகம்.

நாங்கள், பயன்படுத்தப்பட்ட புடவைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதால், இப்போழுது யாருடைய புடவை? என்று பெயர் சூட்டினோம். நகைகள் மற்றும் சிகையலங்காரத்துக்கான பொருட்களை வடிவமைக்கிறோம். அத்தோடு, வளையல்கள், நெக்லஸ் மற்றும் ஹேர் பேண்ட்களை விற்பனை செய்கிறோம்.

இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பணம், காப்பாற்றப்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகவே செலவிடப்படுகிறது. கடந்த ஜனவரியில் உலகளாவிய அளவில் தொடங்கப்பட்ட ரோசினா சேமியின் நகைக்கடைக்கு பல நட்சத்திரங்கள் வாடிக்கையாளராக உள்ளனர். ரிஹானா, ஜெசிகா சிம்ப்சன், மைலி சைரஸ் ஜெசிகா ஆல்பா, நவோமி வாட்ஸ் மற்றும் ஹிலாரி டஃப் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இதில் அடக்கம்.

இங்கு வாங்கப்பட்ட நகைகளை எடுத்துச் செல்ல வாடிக்கையாளர்களுக்கு பைகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மற்றும் அதிலிருந்து மீட்கப்பட்டவர்களால் செய்யப்படும் பைகளுக்கு உரிய தொகையும் வழங்கப்பட்டு விடுகிறது.

அப்னே ஆப் அமைப்பே, மீட்கப்பட்ட பெண்களுக்காக பல்வேறு திறன் வளர்ச்சி வகுப்புகளை நடத்துவதால், இந்தத் தொழிலைச் செய்ய முறையான பயிற்சி எதுவும் தேவையில்லை" என்று கூறினார்.

இவர்கள் செய்த நகைகளுக்கு 15 முதல் 25 டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. நகை மற்றும் அணிகலன்களை மின் வணிகம் மூலம் தனது வலைதளத்தில் விற்பனை செய்கிறார் ரோசினா. இந்தியாவில் கடை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதாம்.

பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட பீஹார் மற்றும் கொல்கத்தா நகரப் பெண்கள் 10 பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாற்றுத் தொழிலில் ஈடுபட நினைக்கும் மற்ற பாலியல் தொழிலாளிகளுக்கு சரியான பாதையைக் காட்டுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in