நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரம்: மோடியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்க காங். முதல்வர்கள் திட்டம்

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரம்: மோடியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்க காங். முதல்வர்கள் திட்டம்
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முதல்வர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதை பிசுபிசுக்கச் செய்யும் நோக்கத்தில் காங்கிரஸ் முதல்வர்கள் ஜூலை 15 கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என முடிவு செய்துள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேரளம், கர்நாடகம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப்பிரதேசம், மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

மோடியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் நிலையில் இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். எனவே காங்கிரஸ் முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தால் 30 முதல்வர்களில் 10 முதல்வர்கள் வராமல் போகும் நிலை ஏற்படும்.

நில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு மம்தா கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதா மீது ஆய்வு நடத்தும் நாடாளுமன்றக் குழுவுக்கு மசோதாவில் உள்ள பிரிவுகளை தமது மாநிலம் எதிர்ப்பதாக தெரிவித்து காங்கிரஸ் முதல்வர்களும் கடிதம் எழுதியுள்ளனர். 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in