

குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் எனக் கருதப்பட்ட சிங்கங்கள் கிர் காடுகளில் பத்திரமாக உலவுவ தாக வனத்துறையினர் தெரிவித் துள்ளனர்.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் கிர் காடுகளில், பாவடி, ஹோகோலியா மலைப் பகுதிகளில் ஏராளமான ஆசிய சிங்கங்கள் வசிக்கின்றன.
சேத்ருஞ்சி ஆற்றங்கரையோர வனப்பகுதிகளான லிலியா கிரக்கச் பகுதிகளில் 40 சிங்கங்கள் வசித்து வந்தன. கடந்த ஜூன் 22-ம் தேதி பெய்த கனமழை காரணமாக சேத்ருஞ்சி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சிங்கங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 10 சிங்கங்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய சிங்கங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் எனக் கருதப்பட்டது. இந்நிலை யில் சுமார் 30 சிங்கங்கள் வனப்பகுதியில் உலவி வருவதாக வனத்துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக துணை வனப் பாதுகாவலர் எம்.ஆர். குர்ஜார் கூறியாதாவது: இந்த சிங்கங்கள் காணாமல் போய்விட்டன. இதில், 10 சிங்கங்கள் இறந்து விட்டன. எஞ்சிய சிங்கங்கள் பாவடி மற்றும் ஹோகோலியா வனப்பகுதியில் உலவுகின்றன. வழக்கம்போல் தங்கள் இரையை வேட்டையாடி வருகின்றன. காணாமல் போன 3 சிங்கங்களை இன்று காலையில் கண்டறிந்தோம். சிங்கங்கள் காணா மல் போனதாக கிடைத்த தகவலையடுத்து, இப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினோம். அவை கிர் காடுகளில் சுற்றித் திரிகின்றன. சேத்ருஞ்சி ஆற்றில் நீர் மட்டம் உயரத்தொடங்கியதும் அவை அருகிலுள்ள கிராமங் களுக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும்.
வனத்துறையினர், விலங்குகள் நல ஆர்வலர்கள், கிராம மக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவை பாதுகாப்பாக உலவுவதை கண்டறிந்துள்ளனர். கிர் தேசிய பூங்காவில் ஏராளமான மேட்டுப்பாங்கான பகுதிகள் உள்ளன. அடுத்தமுறை கனமழைக்கான வாய்ப்பு இருக்கும்போது, கிராம மக்கள் உதவியுடன் சிங்கங்களை வேறு இடங்களுக்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜூன் 22-ம் தேதி பெய்த கனமழை காரணமாக, நீலான், புள்ளிமான், புல்வாய் போன்ற மானினங்கள் உட்பட ஏராளமான தாவர உண்ணி களும், சிங்கங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.