ஹைதராபாத் சிறையில் இருந்து ஐ.எஸ். என்னை காப்பாற்றும்: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி மனைவியுடன் பேசியது அம்பலம்

ஹைதராபாத் சிறையில் இருந்து ஐ.எஸ். என்னை காப்பாற்றும்: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி மனைவியுடன் பேசியது அம்பலம்
Updated on
1 min read

ஐ.எஸ். தீவிரவாதிகள் என்னை சிறையில் இருந்து காப்பாற்றுவார்கள் என்று இந்தியன் முகாஜிகீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் (32) தெரிவித்துள் ளார்.

அகமதாபாத், சூரத், பெங்களூர், புணே, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் யாசின் பட்கலுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் பிஹாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் அவர் டெல்லியில் வசிக்கும் தனது மனைவியிடம் சிறையில் இருந்து 10 முறை செல்போனில் பேசியுள்ளார். அதனை உளவுத் துறையினர் இடைமறித்துக் கேட்டுள்ளனர்.

அப்போது அவர், டமாஸ்கஸ் (சிரியா தலைநகர்) நண்பர்கள் என்னை சிறையில் இருந்து காப்பாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பட்கலின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிரியாவின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே டமாஸ்கஸ் நண்பர்கள் என்று பட்கல் கூறியிருப்பது ஐ.எஸ். தீவிரவாதிகளைத்தான் என்று உளவுத் துறையினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஹைதராபாத் சிறையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in