மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு: ராகுலுக்கு கட்கரி எச்சரிக்கை

மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு: ராகுலுக்கு கட்கரி எச்சரிக்கை
Updated on
1 min read

“லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் நடவடிக்கை ‘குற்றச் செயல்’ என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம் என்று பாஜக எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறும்போது, “ராகுல் காந்தி இந்த வார்த்தைகளை பயன்படுத்தியது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் சுஷ்மா ஸ்வராஜை மட்டும் அவதூறாக பேசவில்லை. உலக நாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக விளங்கும் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மீது அவதூறு கற்பித்துள்ளார். இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

ராகுல் மன்னிப்பு கேட்காவிடில் அவருக்கு எதிராக நாங்கள் அவதூறு வழக்கு தொடர்வோம்.

சுஷ்மா மீதான ராகுலின் கருத்து குழந்தைத்தனமானது. அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

சுஷ்மா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. சட்டத் தையோ, அரசியல் சாசனத்தையோ அவர் மீறவில்லை. ஊழலிலோ அல்லது சட்டவிரோத செயலிலோ அவர் ஈடுடவில்லை. நாட்டின் முக்கிய தலைவர் அவர்” என்றார்.

லலித் மோடி விவகாரத்தில் முன்னதாக ராகுல் காந்தி பேசும் போது, “சுஷ்மா ராஜினாமா கோரிக் கையில் அரசுடன் சமரசப் பேச்சுக்கு இடமில்லை. சுஷ்மா குற்றச் செயலை செய்துள் ளார். நாட்டிலிருந்து தப்பியோடி யவருக்கு பயண ஆவணங்கள் கிடைக்க பரிந்துரைத்து கையெழுத்திட்டுள்ளார். இது பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தெரியவில்லை. இந்திய அரசுக்கும் தெரியவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in