

26/11 மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்ட அதே நபர்தான், 1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனையும் நேற்று தூக்கிலிட்டார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த தூக்கு தண்டனையை நிறை வேற்றும் நபரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புனேவில் உள்ள எரவாடா சிறையில் இருந்து நாக்பூர் சிறைக்கு மாற்றப்பட்ட 20 காவலர் கள் கொண்ட குழுவில் அந்த ‘தூக்கி லிடுபவர்' இடம்பெற்றிருந்தார்.
சிறை வட்டாரங்களின் தகவல் படி, ‘மிகவும் துல்லியமாக' யாகூப் மேமனை அவர், தூக்கிலிட்டதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் எரவாடா ஆகிய இரண்டு மத்திய சிறைச்சாலைகளில் மட்டுமே தூக்கிலிடும் வசதிகள் உள்ளன.