

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் விஜயவாடா பகுதியில் சில இடங்களில் மீன் மழை பெய்தது.
நேற்று முன் தினம் இரவும் மீன் மழை பெய்துள்ளது. நேற்று காலையில் இதனை பார்த்த விஜயவாடாவாசிகள் ஆச்சரியத்துக்குள்ளாயினர். பிறகு அவர்கள் அந்த மீன்களை பிடித்து சென்றனர்.
ஏற்கெனவே கிருஷ்ணா மாவட்டம் கொத்தபல்லி பகுதியில் கடந்த மாதம் மீன் மழை பொழிந்தது.
இந்த மீன்கள், விவசாய நிலத்திலும், சாலைகளிலும் கொட்டி கிடந்ததை பார்த்த கிராம மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.