Last Updated : 13 Jul, 2015 11:07 AM

 

Published : 13 Jul 2015 11:07 AM
Last Updated : 13 Jul 2015 11:07 AM

பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக வியூகம் வகுக்க எதிர்க்கட்சியினருக்கு சோனியா இன்று இப்தார் விருந்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் இன்று இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் உதவியது, வியாபம் ஊழல் என அடுக்கடுக்காக நரேந்திர மோடி அரசுக்கு எதிராக புகார்கள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் வரும் 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் மோடி அரசுக்கு எதிராக வியூகம் வகுக்க சோனியா காந்தி இன்று அளிக்கும் இப்தார் விருந்தை பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த விருந்துக்கு தமது கட்சி யின் நிலைப்பாட்டுடன் ஒருமித்து நிற்கும் கட்சிகளை அழைத்துள்ளார் சோனியாகாந்தி.

பாஜக அரசியலுக்கு எதிர்ப்பாக உள்ளவர்கள் இந்த விருந்தில் கலந்துகொள்வார்கள். மழைக் காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக இந்த விருந்து அளிக்கப்படுவதால் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் நரேந்திர மோடி அரசு பதவியில் அமர்ந்தது. அதற்குப்பின் இப்போதுதான் அமளி ஏற்படுத்துவதாக இந்த கூட்டத்தொடர் இருக்கும் என தெரிகிறது.

முலாயம் சிங் யாதவ் (சமாஜ் வாதி கட்சி), மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சி), சரத்பவார் (தேசிய வாத காங்கிரஸ் கட்சி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்), தேவ கவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), இ.அகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூ னிஸ்ட்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), சுதிப் பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ்), ஆகியோர் விருந்துக்கு சோனியா அழைத் துள்ள தலைவர்களில் அடங்குவர். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழைப்பு விடுக் கப்பட்டபோதிலும் அவர் தான் ஏற் கெனவே திட்டமிட்டுள்ள நிகழ்ச்சி களை காட்டி விருந்தில் பங்கேற் கமுடியாது என்பதை உறுதிசெய் துள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோரும் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணியில் அங்கம் வகித்த அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் மற்றும் அசாமில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஏஐயூடிஎப் ஆகிய கட்சிகளுக்கும் சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாமல் உள்ள பிராந்திய கட்சி களான அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றுக்கு சோனியா அழைப்பு விடுக்கவில்லை.

பிஹாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில் ஒன்றிணைந்து சந்திப்பது என ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன. ஆனால் இடதுசாரி கட்சிகள் தனிப்பிரிவாக செயல்பட்டு தேர்தலை எதிர்கொள்ள முடிவுசெய்துள்ளன.

ஊழல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற லலித் மோடிக்கு பயண ஆவணம் கிடைப்பதற்கு உதவியதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது கூறப்படும் புகார்கள், மத்தியப் பிரதேசத்தில் எழுந்துள்ள வியாபம் ஊழல் புகார் ஆகியவற்றால் பாஜகவும் நரேந்திர மோடி அரசும் திணறிவரும் நிலையில் இப்தார் விருந்து மூலமாக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட காங்கிரஸ் இதை வாய்ப் பாக பயன்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x