

சர்ச்சைக்குரிய ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்த விவாகரம் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறும்போது, “நான் இன்றைக்கே விவாதத்துக்குத் தயார். மாநிலங்களவையில் இதனை தெரிவிக்குமாறு நான் அருண் ஜேட்லியிடம் கேட்டுக் கொண்டேன்.
அதன் படி அருண் ஜேட்லி அவையில் இதனை தெரிவித்தார். எதிர்கட்சியினரின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, ஏற்கெனவே விவாதத்துக்குத் தயார் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
வியாபம் முறைகேடு தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சவுகான், லலித் மோடி விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் மற்றும் சுஷ்மா ராஜினாமா கோரி எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில் விவாதிக்கத் தயார் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.