

தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகை நக்மாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. முத்தம் அளித்ததாகக் எழுந்த சர்ச்சையை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மக்களவைத் தொகுதியில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாபூரில் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்க அவர் சென்றிருந்தார்.
அப்போது, ஹாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் தனது கையால் நக்மாவின் முகத்தை தன்பக்கம் இழுத்தது சர்ச்சையானது. இதற்கு ஏற்ற வகையில் நக்மா, கஜராஜின் கையை உதறித் தள்ளினார். நக்மாவை இழுத்து கஜராஜ் அவரது கன்னத்தில் பலவந்தமாக முத்தம் தந்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்தக் காட்சியை சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பின.
இதுகுறித்து தி இந்துவிடம் நக்மா தொலைபேசியில் கூறியதா வது: அந்த சம்பவம் நடந்தபோது அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்ததால் அதிகமான இரைச்சலாக இருந்தது. அருகில் இருந்தவர்களின் குரல்களையும் கேட்க முடியாத நிலையால், என்னை தன் அருகில் அழைத்து ஒரு தகவலை எம்.எல்.ஏ. கூற வேண்டி வந்தது. அங்கு எனது பிரச்சாரத்தை தொடங்கும் முன்பு அங்கிருந்த ஒரு தலை வரின் சிலைக்கு மாலை அணிவிக் கும்படி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நான் ஒரு நடிகை என்பதால், சில பத்திரிகையாளர்கள் முத்தம் அளித்ததாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது இடத்தில் வேறு யாராக இருந்தா லும், அப்படித்தான் நெருக்கமாக பேசியிருக்க முடியும்.
மேலும், நான் எனது தலையில் முக்காடு போட்டிருந்தேன். இதன் பிறகும் இப்படி ஒரு புகார் கூறுவது ஏற்புடையது அல்ல. அவர் என்னை தான் பெற்ற மகள் போல் பாவித்து பழகுபவர் என நக்மா கூறினார்.