மோடி-நவாஸ் இன்று சந்திப்பு

மோடி-நவாஸ் இன்று சந்திப்பு
Updated on
1 min read

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாடு நேற்று நிறைவு பெற்றது. அதேநகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாடு இன்று தொடங்குகிறது.

கடந்த 2001 ஜூன் 15-ல் சீனாவின் வர்த்தக நகரான ஷாங் காயில் எஸ்சிஓ அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப் பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. பெலாரஸ், துருக்கி, இலங்கை ஆகிய நாடுகள் பங்காளர்களாக உள்ளன.

எஸ்சிஓ அமைப்பில் உறுப்பி னராக இணைய கடந்த 2006-ம் ஆண்டிலேயே பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தது. கடந்த ஆண்டு இந்தியா தனது விருப் பத்தை வெளியிட்டது. இதை எஸ்சிஓ அமைப்பு ஏற்றுக்கொண் டுள்ளது. அடுத்த ஆண்டு உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது உஃபா நகரில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று இஸ்லாமாபாதில் இருந்து உஃபா நகருக்குச் சென்றார்.

இரு நாடுகளின் தலைவர்களும் இன்று காலை 9.45 மணிக்கு சந்தித்துப் பேச உள்ளனர். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவாஸி கலியத்துல்லாவும் உறுதி செய்தனர்.

இச்சந்திப்பின்போது தீவிர வாதி லக்வி விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பக்கூடும் என்று தெரிகிறது. மேலும் எல்லைப் பிரச்சினை, காஷ்மீரில் சண்டை நிறுத்த மீறல், இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது உள் ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in