

கேரள அரசு புதிதாக தொடங்க வுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளது.
மாநில முதல்வர் உம்மன் சாண்டி, சட்டப்பேரவையில் இதனை நேற்று அறிவித்தார். சாண்டி அப்போது கூறும்போது, “விஞ்ஞானியாக கேரள மாநிலத் துடன் கலாம் சுமார் 20 ஆண்டு கள் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தார். எனவே புதிய தொழில்நுட்ப பல்கலை.க்கு ஏபிஜே அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழம் என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளோம். ராமேஸ்வரத்தில் வியாழக் கிழமை நடைபெறும் கலாமின் இறுதிச் சடங்கில், கேரளத்தின் சார்பில் மாநில ஆளுநர் பி.சதாசிவம், எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், அமைச்சர்கள் பி.ஜோசப், எம்.கே.முனீர் ஆகி யோருடன் நானும் பங்கேற்கிறேன்” என்றார்.