

பிஹார் மாநிலம் ஜமுவி பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் இருந்து 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் மாவோயிஸ்ட்டுகளால் நேற்று அதிகாலை கடத்தப்பட்டான்.
ஜமுவி பகுதியில் உள்ளது சிமுல்தலா உறைவிடப் பள்ளி. இங்கு உள்ள ஆண்கள் விடுதியில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் படித்து வருகிறான். போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவன், சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தேர்வில் 8வது தரவரிசையைப் பிடித்தான்.
அந்த விடுதியைச் சுற்றி சுற்றுச் சுவர்கள் எதுவும் அமைக்கப்பட வில்லை. இதனால் மாவோயிஸ்ட்டு கள் சுலபமாக உள்ளே புகுந்து அதிகாலை சுமார் 2 மணி அளவில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அந்த மாணவனை கடத்தியுள்ளனர்.
பின்னர் அவனை காட்டுக்குள் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு நடக்கச் செய்து, அவன் கடத்தப்பட்டுள்ளதை அவனுடைய பெற்றோருக்கும், அவனது பள்ளிக்கும் தெரிவிக்கும்படி மாவோயிஸ்ட்டுகள் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அப்பகுதி காவல் நிலையத்தின் உயர் அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட் டது. மாவோயிஸ்ட்டுகள் அந்தச் சிறுவனை தீத்தி சக் கிராமத்தில் விட்டுவிட்டு, தப்பிவிட்டனர். பின்னர் போலீஸார் அவனை மீட்டனர்.
இதுகுறித்து அரவிந்த் குமார் கூறும்போது, "சிறுவனைக் கடத்திய மாவோயிஸ்ட்டுகள் அவனிடம், `இன்னும் 12 நாட்களுக் குள் இந்தப் பள்ளியை விட்டு அனைவரும் வெளியேற வேண் டும். இல்லையெனில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறும். இதனை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூற வேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்" என்று கூறினர்.