

நிதாரி கொலை வழக்கு தொடர்பாக தூக்குத் தண்டனை கைதி சரேந்தர் கோலிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி நொய்டாவை அடுத்த நிதாரியில் 14 வயது சிறுமி ரிம்பா ஹல்தர் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, சுரேந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சுரேந்தர் கோலிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. சுரேந்தர் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 2014 ஜூலை 27-ம் தேதி நிராகரித்தார்.
இந்நிலையில். சுரேந்தர் மீதான மற்றொரு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெ.எல்.தத்து தலைமையிலான அமர்வு, சுரேந்தர் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.