

அப்துல் கலாம் தனது வீட்டில் எப்போதுமே தொலைக்காட்சியை வைத்துக் கொண்டது கிடையாது என்று அவரிடம் 24 ஆண்டுகள் தனிச் செயலராக பணியாற்றிய ஹரி செரிட்டன் (53) கூறியுள்ளார்.
தினமும் காலை 6.30 மணியளவில் எழுந்து கொள்ளும் வழக்கமுள்ள அவர் இரவு 2 மணி வரை விழித்திருந்து தனது பணிகளை கவனிப்பார். வீட்டில் எப்போதுமே டி.வி. வைத்துக் கொண்டது இல்லை. வானொலி மட்டுமே கேட்பார். முக்கியமாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் செய்திகள் மூலம் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதே அவரது வழக்கம். தினமும் இ-மெயிலை பார்த்து, அதற்கு உரிய பதில்களை அளிப் பதை கடமையாக கொண்டிருந்தார், என்றார்.