Last Updated : 04 Jul, 2015 05:12 PM

 

Published : 04 Jul 2015 05:12 PM
Last Updated : 04 Jul 2015 05:12 PM

யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களில் பெண்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் 3 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ 6-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அதேப் போல, முதல் 2 இடத்தைச் சேர்ந்த பெண்களும் டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவர்.

சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும் வந்தனா ராவ் ஆகியோர் முதல் 4 இடங்களை பெற்றுள்ளனர். கேரளாவை சேர்ந்த ரேணு ராஜ் மருத்துவர் ஆவார். இவர் தனது முதல் முயற்சியிலேயே 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சுஹர்ஷா பட் என்பவர் 5-வது இடத்தை பிடித்தவர் ஆவார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான மொத்தம் 1,364 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 1300 பணியிடங்களுக்கான அந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் இருந்து 17 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.

டிசம்பர் 14-ம் தேதி மெயின் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 900 பேர் இதை எழுதினர். இந்தியா முழுவதுமாக இதில் 3 ஆயிரத்து 293 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் இறுதி தேர்வு டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x