

‘வியாபம்’ ஊழல் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரி சோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
வியாபம் ஊழலில் சம்பந்தப் பட்டதாக நம்ரதா தாமோர் என்ற மருத்துவ மாணவி மீது புகார் கூறப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே அவர் மர்மமாக இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கை முடித்துக் கொண்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்ரதாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் பி.பி.புரோஹித் கூறியதாவது:
நம்ரதாவின் உடலை என்னுடன் சேர்த்து 3 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தோம். இந்தத் துறையில் எங்களுக்கு 25 ஆண்டு அனுபவம் உள்ளது. நம்ரதா தற்கொலை செய்து கொள்ளவில்லை. இயற்கையான மரணம் நிகழ்ந்ததற்கான ஆதா ரங்கள் ஒரு சதவீதம் கூட கிடையாது. அவர் கொலை செய் யப்பட்டிருக்கிறார். அவரது குரல் வளை நெரிக்கப்பட்டுள்ளது. கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந் திருக்கிறார்.
நம்ரதாவின் மூக்கு, வாய் பகுதிகளில் காயங்கள் உள்ளன. அவர் உயிருக்காக கடுமையாக போராடி இருக்கிறார். அவர் உடலி லும் காயங்கள் உள்ளன. அவர் இறந்த பின், அவரது உடலை தண்டவாளத்துக்கு இழுத்து சென் றதற்கான ஆதாரங்கள் அவை. இவ்வாறு மருத்துவர் புரோஹித் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் சவுகான்
வியாபம் முறைகேடு தொடர் பாக பாஜக தலைவர்களைச் சந் தித்து ஆலோசனை நடத்துவதற் காக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லி சென்றுள்ளார்.
வியாபம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகான் டெல்லி சென்றுள்ளார். இருப்பினும், போபாலில் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறவுள்ள உலக இந்தி மாநாடு தொடர்பாக, சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க சவுகான் டெல்லி சென்றி ருப்பதாக கூறப்படுகிறது.