

தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மின் உற் பத்தித் திட்டத்தை தொடங்கி வைக் கிறார். மேலும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகதத்தில் அறுவைச் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார்.
சிறப்பு விமானம் மூலம் பபத்பூர் லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் வரும் மோடி, அங்கிருந்து விழா அரங்குக்கு வருகிறார்.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.
ஒருங்கிணைந்த மின்சார மேம் பாட்டுத் திட்டத்தை (ஐபிடிஎஸ்) மோடி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து வாரணாசி-பபத்பூர் இடையே நான்கு வழிச் சாலை யைத் திறந்து வைத்து, வட்டச் சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சவுக், கஸக்புரா பகுதிகளில் இரு துணை மின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், டிஎல்டபிள்யூ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். முன்னதாக, பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அறுவைச் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைக் கிறார். மோடியின் வருகையை யொட்டி வாரணாசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய், உ.பி. சுகாதாரத்துறை அமைச்சர் அமகது ஹசன், மின்சாரத்துறை அமைச்சர் யாசர் ஷா உள்ளிட் டோர் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.