

மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநரை, வியாபம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் நேற்று சந்தித்து, விசாரணைக்கு ஆதரவு கோரினர்.
சிபிஐ அதிகாரிகள் போபாலில் தங்கியிருந்து வியாபம் ஊழல் வழக்கை விசாரித்து வருகின்றனர். இதன் விரிவான விசாரணைக்கு, அலுவலகம், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தேவைப்படுகின்றன.
இதையொட்டி மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர் ஆன்டனி ஜேசி டேஸா மற்றும் டிஜிபி சுரேந்திர சிங் ஆகியோரை சிபிஐ இணை இயக்குநர் ஆர்.பி.அகர்வால் மற்றும் அதன் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று சந்தித்து பேசினர்.
ஆர்.பி. அகர்வால் தலைமையில் 40 உறுப்பினர்கள் கொண்ட சிபிஐ குழு தனது பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு முன் வியாபம் வழக்கை விசாரித்த, மத்தியப் பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவின் (எஸ்டிஎப்) இயக்குநர் சுதிர் சாகியையும் இக்குழுவினர் சந்தித்துப் பேசினர்.
வியாபம் ஊழல் வழக்கு மற்றும் இது தொடர்பான மர்ம மரண வழக்குகளை சிபிஐ விசா ரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.