ராஜஸ்தானில் கோயில்கள் இடிப்பு: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சாலை மறியல்

ராஜஸ்தானில் கோயில்கள் இடிப்பு: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சாலை மறியல்
Updated on
1 min read

ஜெய்ப்பூரில் மெட்ரோ பணிகளுக் காக இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராம் பாக் வட்டாரம், அஜ்மேரி கேட், எம்.ஐ. சாலை, அரசு விடுதி, சோமு புலியா, சங்கானெர், சோடலா உள்ளிட்ட 80 முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு பள்ளி செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

ஜெய்ப்பூர் காவல்துறை கூடுதல் ஆணையர் மகேந்திர சிங் கூறும்போது, “சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குளதான் உள்ளது. போராட்டம் அமைதியாகவே நடந்தது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் எதுவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளவில்லை. கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, 11 மணிக்குப் பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது” என்றார்.

மந்திர் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு இந்த போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது.

இந்த அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பத்ரி நாராயண் சவுத்ரி கூறும்போது, “காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, அவசர கால சேவைகள், காவல் துறை, நீதிபதிகளின் வாகனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப் பட்டன. தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் 73 கோயில்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 34 கோயில்கள் இடிக்கப்பட்டன. கோயில்களை அவற்றின் முந்தைய இடத்திலேயே நிறுவ வேண்டும்.

இந்து சமூகத்தினரின் உணர்வு களைப் புண்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in