போலீஸ் வேனை ஏற்றி கொல்ல முயன்றனர்: ஆம் ஆத்மி தலைவர் குற்றச்சாட்டு

போலீஸ் வேனை ஏற்றி கொல்ல முயன்றனர்: ஆம் ஆத்மி தலைவர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

போலீஸ் வேனை ஏற்றி கொல்ல முயன்றதாக டெல்லி காவல்துறை மீது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் திலீப் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறும் போது, “ஒரு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட கட்சியின் பெண் தொண்டர்களை விடுவிக்குமாறு கேட்டு, டெல்லி ராஜீந்தர் நகர் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க் கிழமை இரவு சென்றேன். அப்போது எனக்கு பின்னாலிருந்து போலீஸ் வேன் ஒன்று என்னை இடித்து தள்ள முயன்றது. கட்சித் தொண்டர் ஒருவர் என்னை தள்ளி விட்டதால் நான் உயிர் தப்பினேன். டெல்லி போலீஸார் என்னை கொல்ல முயன்றது கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளேன். வழக்கு பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை, கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று காலை சந்தித்து, இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆம் ஆத்மி தலைவர்கள் அசு தோஷ், குமார் விஸ்வாஸ் திலீப் பாண்டே, சஞ்சய் சிங், துர்கேஷ் பதக் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங்கை நேற்று மாலை சந்தித்தனர்.

காவல்துறை மறுப்பு

டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி நேற்று கூறும்போது, “இந்தக் குற்றச்சாட்டு மிகவும் அற்ப தனமானது. இது போன்ற செயல் களில் எங்களுக்கு நம்பிக்கை யில்லை. என்றாலும் இது தொடர் பாக புகார் தரப்பட்டால் அது குறித்து தீவிரமாக விசாரிப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in