

கர்நாடக மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் கடன் தொல்லை, வறட்சி, இயற்கை பேரழிவு உள் ளிட்ட பல்வேறு காரணங்களால் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதனை கண்டித்து எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தும்கூர் மாவட்டம், ஹொன்னகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜூ (30), ஹாசன் மாவட்டம், ஜவாரிகொப்பலு கிராமத்தை சேர்ந்த சந்திரகவுடா (45), ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நாகப்பா (48) ஆகியோர் கடன் தொல்லை காரணமாக நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி களும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.