

டெல்லியில் ஊதிய உயர்வு கேட்டு ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்கள், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் கடிதம் அளித்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாநில அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகளை அளிக்க முடியும் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்தது ஆம் ஆத்மி கட்சி. இக்கட்சி எம்எல்ஏக் கள் பலர் தங்களுக்கு மாத ஊதிய மாக ரூ.1 மட்டும் பெற்றுக் கொண்டு எஞ்சிய தொகையை மக்களுக்காக செலவிடும்படி கூறி விட்டனர். இதற்காக டெல்லிவாசி கள் இடையே இவர்கள் நற்பெயர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முழு ஊதியம் பெறும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்க ளில் சுமார் 20 பேர், தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் கேஜ்ரிவாலிடம் இவர்கள் அளித் துள்ள கடிதத்தில், “கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த் தப்படவில்லை. தற்போது அதிகரித்துள்ள விலைவாசியை கணக்கில் கொண்டு ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டும்” என்று கூறியுள்ளனர்.
கடந்த 2011-ல் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் எம்எல்ஏக்-களின் ஊதியத்தை நூறு சதவீதம் உயர்த்தினார். தொகுதி அலுவலக செலவும் சேர்த்து எம்எல்ஏக்கள் மாத ஊதியமாக ரூ.93,000 மற்றும் இதர படிகள் பெறுகின்றனர். மாநில அமைச்சர்கள் ஊதியமாக மட்டும் ரூ.1.25 லட்சம் பெறுகின்ற னர். டெல்லி எம்எல்ஏக்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 12,000 மட் டுமே என்றாலும் இத்துடன் தொகுதிப்படி ரூ. 18,000, தொலைபேசிக் கட்டணம் ரூ.8,000, தொகுதி பயணச்செலவு ரூ.50,000 சேர்த்து அளிக்கப்படுகிறது.
இதுதவிர வீட்டு வாடகை ரூ.20,000, வீடுகளுக்கான மின் சாரம் மற்றும் குடிநீர் செலவுக்காக ரூ.4,000, பயணப்படி ரூ.6,000 தரப்படுகிறது. மேலும் அன்றாட செலவுப் படியாக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூறும் போது, “அன்றாடம் பல்வேறு கோரிக்கைகளுடன் எங்கள் வீட் டுக்கு வரும் தொகுதிவாசிகளுக்கு தேநீர், பிஸ்கெட் அல்லது குளிர் பானம் அளிக்காமல் திரும்ப அனுப்ப முடியாது. இந்த ஊதிய உயர்வுக்கு மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும் என்ப தால் இதன் மீது கேஜ்ரிவால் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்” என்றனர்.
டெல்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 எம்எல்ஏக்களில் 67 பேர் ஆம் ஆத்மி கட்சியினர். 3 பேர் மட்டுமே பாஜகவினர். எனவே ஊதிய உயர்வு கோரிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது எனக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஊதிய உயர்வுக்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சர்மா ‘தி இந்து’விடம் கூறும்போது, “என்னை பொறுத்தவரை தற் போது எம்எல்ஏக்களுக்கு கிடைக் கும் ஊதியம் போதுமானதாகும். பொதுமக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டு ஊதிய உயர்வு கேட்பது நியாயமில்லை. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் பலரை போல நானும் ரூ.1 மட்டுமே ஊதியமாகப் பெறுகிறேன். ஆனால் இவர்கள் முழு சம்பளம் பெறுவதுடன் உயர்த்தியும் கேட்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்றார்.