எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு, பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம் இருப்பதை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீடித்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 3-ம் தேதியன்று இந்திய எல்லையில் பூஞ்ச் மாவட்டம் சவ்ஜியான் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in