நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளை சமாளிக்க அமைச்சர்கள் நாளை ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளை சமாளிக்க அமைச்சர்கள் நாளை ஆலோசனை
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் டெல்லியில் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. அப்போது வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம், நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் இப்தார் விருந்து அளித்தார். அதில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அரசுத் தரப்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் டெல்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த துறைகளின் செயலாளர்களும் பங்கேற்கின்றனர். அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து புதிய வியூகம் வகுக்கப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in