இறந்த தாய்க்காக பிரச்சாரம் செய்யும் மகள்கள்

இறந்த தாய்க்காக பிரச்சாரம் செய்யும் மகள்கள்
Updated on
1 min read

ஆந்திர பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஷோபா நாகிரெட்டி விபத்தில் உயி ரிழத்து விட்டார். எனினும் அவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது மகள்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

கர்னூல் மாவட்டம் ஆள்ள கட்டா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூமா ஷோபா நாகி ரெட்டி (45). இவர், இத்தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ. வெற்றி பெற்றுள்ளார். 5-வது முறையாக இம்முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டி யிட்டார். இந்நிலையில் கார் விபத்தில் ஷோபா நாகிரெட்டி உயிரிழந்தார்.

அவர்தான் இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த வேளையில், இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. இதனால் துவண்டு போகாமல், ஷோபா நாகிரெட்டியின் மகள்கள் அகிலப்ரியா, மோனிகா ஆகியோர் இறந்த தங்களது தாய், அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கோடு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொகுதி மக்களும், மகள்களின் பிரச்சாரத்தை கண்ணீர் மல்க கேட்டு ஆறுதல் கூறி வருகின்றனர். இவர்களது பிரச்சாரத்தில் மக்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வெற்றி பெற்றாலும் செல்லாது

ஷோபா நாகிரெட்டிக்கு வாக்களித்தால் அவை செல்லாது என மாநில தேர்தல் ஆணையர் பன்வர்லால் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ஷோபா நாகி ரெட்டி போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. ஆதலால், அங்கீகரிக்கபடாத கட்சியின் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் நடப்பதற்கு முன்னர் இறந்தால், அவருக்கு கிடைக்கும் வாக்கு கள் செல்லாதவை என்றே கணக்கிடப்படும். தேர்தல் விதி 52-ன் படி இதுதான் முறை. இவருக்கு மற்ற வேட்பாளர் களை விட அதிகமாக வாக்கு கள் கிடைத்தால். அவை நோட்டா வாக்குகளாகத்தான் கணக்கிடப்படும்.

ஷோபா நாகிரெட்டி வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டுமா? அல்லது இவருக்கு அடுத்தப்படியாக அதிக வாக்கு பெற்றவரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமா? எனக் கேட்டு மத்திய தேர்தல் ஆணை யத்திற்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது. தேர்தல் முடிவின் போது இது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in