

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ராம்கிருபால் யாதவ் டெல்லியில் ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
லாலு பிரசாத் யாதவின் மகள் பிஹாரின் பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் ராஜ்யசபை எம்பியும் பொதுச்செயலாளருமான ராம்கிருபால் யாதவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்.
ராம்கிருபாலை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டது போல் அவர் இன்று பாஜகவில் இணைந்தார். பின்னர் பேசிய அவர், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் தான் ஒரு விசுவாசியாக 35 ஆண்டு காலம் இருந்ததாகவும், ஆனால் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் சூழலுக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ராஷ்டிரீய ஜனதா தள கட்சியில் குடும்ப உறுப்பினர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.