Published : 09 Jul 2015 09:58 AM
Last Updated : 09 Jul 2015 09:58 AM

வியாபம் தேர்வில் 4 நூதன முறைகளில் மோசடி

மத்தியப் பிரதேசத்தில் தொழில் முறை தேர்வு வாரியத்தில் (வியாபம்) நடைபெற்ற ஊழலில் 4 நூதனமான முறைகள் கையாளப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வியாபம் ஊழல் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் மத்தியப் பிரதேச முதல் வர் சவுகானுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற் படுத்தி உள்ளது.

தொழில்முறைக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் தகுதித் தேர்வு நடத்துவதுதான் வியாபம் நிறு வனத்தின் பிரதான பணி. இந்நிலையில், தகுதித் தேர்வை எழுத விரும்பாதவர்கள் லஞ்சம் கொடுத்து கல்லூரிகளில் அல்லது அரசு வேலைகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3-ல் 2 பேர் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் ஆவர். 70 பேர் இடைத்தரகர்களாக செயல் பட்டவர்கள் ஆவர். இதுதவிர 40-க்கும் மேற்பட்டோர் மர்மமாக இறந்துள்ளனர்.

இந்த மோசடி தொழில்நுட்ப ரீதியாக நடைபெறவில்லை. மாறாக 4 நூதன முறைகளில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந் துள்ளது. வியாபம் தேர்வை எழுதாம லேயே கல்லூரியிலோ அல்லது அரசு வேலையிலோ சேர விரும்புகிறவர்களை இடைத்தரகர் கள் அடையாளம் கண்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப் படத்துக்கு பதில் திறமையான ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து அவரது புகைப்படத்தை ஒட்டி ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுத அனுமதித்துள்ளனர்.

நுழைவுச்சீட்டில் உள்ள பெயருக்கும் புகைப்படத்துக்கும் உள்ள முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு தேர்வுக் கூட கண்காணிப்பாளருக்கு லஞ்சம் கொடுத்து சரிசெய்துள்ளனர். தேர்வு முடிவு வெளியானதும் தேர்வு எழுதியவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு உண்மையான விண் ணப்பதாரரின் புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி உள்ளனர்.

அடுத்தபடியாக, திறமையான மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று கடைசி நேரத்தில் கல்லூரியில் சேராமல் போனதுபோல் மோசடி செய்துள்ளனர். அந்த இடங்களை வேறு மாணவர்களுக்கு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளதாக கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்லூரியில் இடங்களை ஒதுக்கியுள்ளனர்.

மூன்றாவதாக, விண்ணப்பதாரர் சார்பாக தேர்வெழுத திறமை யானவர்கள் கிடைக்காதபட்சத்தில், தேர்வு அறையில் திறமையானவர்க ளுக்கு பின்னால் லஞ்சம் கொடுத்த வர்களை அமர வைத்து ‘காப்பி’ அடிக்க அனுமதித்துள்ளனர்.

நான்காவதாக, திறமையான வர்கள் கிடைக்காதபட்சத்தில் மாண வர்களை தேர்வெழுத அனுமதித்து விட்டு, கணினியில் சாப்ட்வேர் உதவி யுடன் மதிப்பெண்ணை திருத்தி சான்றிதழை வழங்கி உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x