

முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி உட்பட நான்கு பேரின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அந்த பாஸ் போர்ட்களை திரும்ப ஒப்படைக்க விசாரணை நீதிமன்றம் தீர்ப் பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவில்லை என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்கள வையில் நேற்று தெரிவித்தார்.
பெமா வழக்கில், லலித் மோடி மீது அமலாக்கப்பிரிவு, அந்நிய பணப்பரிவர்த்தனை (ஃபெமா) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
இதுதவிர, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் அலுவாலியா, ஆனந்த் ஜெய்ஸ்வால் உட்பட மேலும் மூவரின் பாஸ்போர்ட்களும் முடக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கில் பாஸ்போர்ட்களை விடுவிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் 2014 ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக மாநிலங் களையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் சுஷ்மா பதிலளிக்கும்போது, “லலித் மோடி உள்ளிட்ட நால்வருக்கு பாஸ்போர்ட் அளிக்கும் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படவில்லை. பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கு அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யும் முடிவை, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனான ஆலோ சனைக்குப் பின் பாஸ்போர்ட் அலுவலகம் எடுக்கும்.
அதேபோன்று, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, வெளி யுறவு அமைச்சகத்தின் தூதரக,பாஸ்போர்ட், விசா பிரிவு (சிபிவி), சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அமைப்பின் வேண்டு கோளுக்கு ஏற்ப, சட்ட அமைச்ச கத்தின் ஆலோசனையுடன் முடிவெடுக்கும்” என்றார்.