நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு

நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு
Updated on
1 min read

நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது.

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.9 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 9,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.22 மணியளவில் தோலகா மாவட்டத்தில் மையம் கொண்டு 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. பின்னர் 10.19 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் மையம் கொண்டு 5.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

ஏப்ரல் 25 நில நடுக்கத்துக்குப் பின்னர் அங்கு இதுவரை 313 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in