

யோகா குறித்த பாகிஸ்தானின் நிலை மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்வதேச யோகா தினத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித் துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கொல் கத்தாவில் நேற்று கூறியதாவது:
உலகம் முழுவதும் 190 நாடுகள் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளன. இதில் 44 முஸ்லிம் நாடுகளும் அடங்கும். அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் யோகாவின் பலன்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் பாகிஸ்தானில் யோகா தினத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அந்த நாடு தனது நிலையை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். யோகா ஒரு மதம் சார்ந்த பயிற்சி அல்ல. இது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சொந்தமானது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.